தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் கல்வி தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, ஒவியம் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தாண்டு நடக்கும் போட்டிகளில் தற்போது பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். இவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்படும்.
இதற்கான போட்டிகளின் விவரங்களையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளையும் tndiprmhmsmp@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Click Here to Download - பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் - கலைப் போட்டிகள் - Press News - Pdf
No comments:
Post a Comment