பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்; தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளிகளில் கலெக்டர் மற்றும் கல்வி சாரா அலுவலர்கள் தலையீடு, கண்ணியக்குறைவாக பேசுதல் ஆகியன தவிர்க்க வேண்டும்.
மாணவர் தேர்ச்சி குறைவுக்கு ஆசிரியர் மட்டுமே காரணம் என்ற வகையிலான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை ஆசிரியர் சங்கம் முன் வைத்துள்ளது இதை வலியுறுத்தி நேற்று மாலை, மாநில அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் புஷ்பலதா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், பிரகாஷ், வனிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி, மாநில துணை தலைவர் சிவகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர். இதில்திரளாக கலந்து கொண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment