திமுக அரசு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என கூறி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து, பகுதி நேர ஆசிரியர்கள் இன்று சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து போராடத்தை தொடங்கிய நிலையில், அவர்களை அங்கிருந்து காவல்துறையினர் அகற்றியதால், அவர்கள் அண்ணாசாலையில் அமர்ந்து போராடினர்.
சென்னை அண்ணா சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்,. பலர் சாலையில் இருந்து எழ மறுத்த நிலையில், பெண் ஆசிரியர்களை பெண் காவலர்களை வைத்தும், ஆண்களை காவலர்களையும் வைத்தும், கையை பிடித்து இழுத்து அங்கிருது அகற்றினர். மேலும், போராட்டத்துக்கு வருகை தரும் ஆசிரியர்களையும் உடனுக்குடனே கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்து போராட்டத்துக்கு வருகை தரும் ஆசிரியர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை போலீசார் அந்த பகுதியில், தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படாததால் 2012-ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்ட 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி விலகி விட்ட நிலையில், சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கருணை அடிப்படையில் பனியமர்த்தப்படவில்லை. மாறாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியும். இதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கின்றன.
ஆனால், அதை நிறைவேற்ற திமுக அரசு மருத்து வருகிறது. அதுமட்டுமின்றி, திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டும் ஆசிரியர் சங்கங்கள், பணி நிலைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு நடத்த வேண்டும்; அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment