பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று சென்னையில் பேரணியாக சென்று கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தினார்கள். இந்த நிலையில் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அரசுக்கு நமது கோரிக்கையை வென்றெடுக்க மிகப்பெரிய அழுத்தம் கொடுத்துள்ளோம். கூடிய விரைவில் வெற்றியாக மாறும். கடந்த 12 நாட்களாக போராட்டக்களத்தில் இருந்த ஆசிரியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment