பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து - 3 மாணவர்கள் பலி - Asiriyar.Net

Tuesday, July 8, 2025

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து - 3 மாணவர்கள் பலி

 



கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறுகையில்,


வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad