நம்ம ஊரில் மூட நம்பிக்கை எல்லாம் இல்லை என கூறுபவர்கள் இச்செய்தியை படித்தால் , அவர்களின் கருத்து மாறிவிடும் . கோவை , கிணத்துக்கடவில் 8 - ம் வகுப்பு மாணவி கடந்த 5 - ம் தேதி பருவமடைந்துள்ளார் . தனியார் பள்ளியில் படிக்கும் அம்மாணவி , தேர்வு எழுத வந்தபோது , அவரை வெளியில் அமரவைத்து எழுத வைத்துள்ளனர் . பெண் ஆசிரியர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டதை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர் . இன்னும் எத்தனை காலம் தானோ !
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அந்த மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தினார்.
அதன்பிறகு கடந்த 7ம் தேதி மற்றும் நேற்று நடைபெற்ற தேர்வின் போது, மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment