பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை - TETOJAC சார்பில் அமைச்சருக்கு 12 கோரிக்கைகள் - Asiriyar.Net

Monday, April 21, 2025

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை - TETOJAC சார்பில் அமைச்சருக்கு 12 கோரிக்கைகள்

 




1. ஒன்று ஒன்று 2006 முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் 


2. எமிஸ் பதிவேற்றப் பணியில் மாணவர்கள் வருகைப்பதிவு தவிர பிற அனைத்து வகையான பதிவேற்ற பணிகளில் இருந்தும் ஆசிரியர்களுக்கு விடிவிப்பு 


3. என்னும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் கிடையாது


4. பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம் (எஸ்.எம்.சி.) ஆண்டிற்கு 4 முறை கூட்டினால் போதும்.


5. உயர்கல்வி படித்த 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கப்படும்.


6. உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு பருவகால ஊதிய உயர்வின்றி "என்ட்ரீ பே” மட்டுமே பெற்றுவரும் ஆசிரியர்கள் 1,500 பேருக்கு நியமனம் முதல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல். 7.பி.லிட். முடித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள், அதன் பின்னர் பி.எட். படித்தால் வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக்கைத் தடைகள் நீக்க நடவடிக்கை.


8.58 மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பள்ளித் துணை ஆய்வர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு பணி மாற்றம் அளிக்கப்படும். 9. பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன் படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும். 3 மாத காலத்திற்குள் மாற்று ஏற்பாடு செய்யப்படும்.


10. 2019-ib ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை முதல் தகவல் அறிக்கை 586 பேருக்கு நிலுவையில் உள்ளது. இதனால் வெளிநாடு அனுமதி, விருப்பப் பணித்துறப்பு கோருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


12. பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவை என்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் பதவி உயர்வு பணிமோட்டின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும் விரைந்து தீர்வு காண தனி கவனம் செலுத்தப்படும்.


11.தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ரூ.5,400 தர ஊதியம் பெற்றவர்களின் தணிக்கைத்தடை முற்றிலும் நீக்கப்படும். அவர்களே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் நேர்வில் கீழ்நிலைப் பதவியில் பெற்ற அதே தரஊதியம் தொடர ஆணை பெறப்படும்.


Click Here to Download - TETOJAC சார்பில் 12 கோரிக்கைகள் - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad