ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக - Director Proceedings (15-04-2025) - Asiriyar.Net

Wednesday, April 16, 2025

ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக - Director Proceedings (15-04-2025)

 

024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15.04.2025...


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டப்படி மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகின்றது . 


1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 11.04.2025 தேதியும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 17.04.2025 தேதியும் , 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 24.04.2025 தேதியும் தேர்வுகள் நிறைவடைகின்றன . மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி வகுப்புவாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர் தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.


விடைத்தாள் மதிப்பீட்டு பணி மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி போன்ற நிர்வாகப் பணிகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை LKG / UKG வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது . 


மேலும் மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதி தேர்வின் தேர்ச்சி அறிக்கைக்கு ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் அனைத்து பள்ளிகளும் ஒப்புதல் பெற்றிட வேண்டும் . 01.05.2025 முதல் EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் கிடைப்பதற்கு மாநில மையம் வாயிலாக வழிவகை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .





No comments:

Post a Comment

Post Top Ad