கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடைத்தாளில் ரூ.500 உடன் மாணவர்கள் வைத்த கோரிக்கைகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வி தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. விடைத்தாள்களில் ரூ.500 உடன் மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை கண்டு ஆசிரியர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
அந்தக் கோரிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெற உதவுமாறு கேட்டுக்கொண்டு விடைத்தாளில் ரூ. 500 நோட்டை வைத்தார்.
* மற்றொரு மாணவர் ரூ.500 ரூபாய் நோட்டு வைத்து, ''தயவுசெய்து என்னை தேர்ச்சி பெற செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் உள்ளது,' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment