உள்ளூர் விடுமுறையை ஈடுச்செய்தல் - ஞாயிற்றுக்கிழமை பணிநாளாக அறிவிப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை - Asiriyar.Net

Monday, April 14, 2025

உள்ளூர் விடுமுறையை ஈடுச்செய்தல் - ஞாயிற்றுக்கிழமை பணிநாளாக அறிவிப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை

 

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை


அரசு நிலை ஆணை எண்.313, பொது (பல்வகை) துறை நாள்-1103.1997.இல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இஆப.,, ஆகிய நான் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 07.04.2025 அன்று நடைபெற்றதை 


தொடர்ந்து அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அறுவகைங்களுக்கும், கல்விநிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 19.04.2025 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கப்பட்டது.


இந்நேர்வில், ஏற்கனவே பணி நாளாக அறிவிக்கப்பட்ட 19.04.2025 தினங்களில் தொடர்விடுமுறைகள் வருவதால் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 26.04.2025 சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.


மாவட்ட ஆட்சித்தலைவர், புதுக்கோட்டை





No comments:

Post a Comment

Post Top Ad