EMIS Online TC தயாரிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை - Asiriyar.Net

Tuesday, April 22, 2025

EMIS Online TC தயாரிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை

 




STUDENTS TC GENARATION REGARDING


*குறிப்பு:- தற்பொழுது இறுதி வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு TC சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்து Save மட்டுமே கொடுக்க வேண்டும். மாநில/ மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கும் வரை எக்காரணம் கொண்டும் common pool ற்கு அனுப்புதல் கூடாது.


அனைத்து வகுப்புகளுக்குமான TC Generation பணியினை தற்காலிகமாக செய்துகொள்ளலாம்.  அதன்படி…


1. TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, EE  mark entry, 7.5% Verification(school & medium) , Career Guidance work மற்றும் EMIS சார்ந்த பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.


2. மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம். 


3. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.


4. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.


5. மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.


5. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும் 

  • Primary - வகுப்பு 5
  • Middle  - வகுப்பு 8


 *முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common pool க்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.


 Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.


6. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு  பயிலும் (Classes - Primary -5,Middle -8 )மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.* 


7. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது .எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும். 


8. TC edit செய்வதற்கு reset தேவைப்பட்டால் தங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்  மூலம் தகவல் தெரிவிக்கவும்.


மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad