Joint Action Council of Tamilnadu Teachers Organisation and Government Employees Organisation
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்
ஜாக்டோ-ஜியோ சார்பில் வரவேற்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர்கள் நலன் காக்கும் விதமாக வெளியிட்டுள்ள 9 அறிவிப்புகளான ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் சரண் செய்து பணப்பயன் 01.10.2025 முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
01.01.2025 முதல் 2% அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்ந்துள்ள பெண் அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறுவிடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம்.
மேலும், பண்டிகை கால முன்பணம் ரூ.20,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கான முன்பணம் 1,00,000/- மற்றும் 50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் திருமண முன்பணம் ரூ.5,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகிய அறிவிப்புகளை ஜாக்டோ ஜியோ சார்பாக வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment