உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03 .2020க்கு முன்பாக முடித்தவர்களுக்கு இரண்டு அப்பில் வழக்குகளில் அனுமதி - Asiriyar.Net

Tuesday, April 29, 2025

உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03 .2020க்கு முன்பாக முடித்தவர்களுக்கு இரண்டு அப்பில் வழக்குகளில் அனுமதி

 

உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03 .2020க்கு முன்பாக முடித்தவர்களுக்கு  இரண்டு அப்பில் வழக்குகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது .

* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706.


* அரசு தரப்பில் 10 .03.2020க்கு முன்பாக ஆணை வழங்கப்படவில்லையெனில் , If no Previous order were issued என்று அரசாணையில் தெரிவித்தவாறு ஆணை ஏதும் வழங்கப்படாத நிலையில், 10 .03.2020 க்கு முன்பாக முடித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது .அரசாணை எண் 37 நாள் 10.03 .2020 , 6 (vi) ன் படி ஆணை எதுவும் வழங்கப்படாத நிலையில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


* மேற்கண்ட அரசு வழக்கறிஞர் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை


* அரசாணை எண் 37 Cannot operate retrospectively அரசாணை எண் 37 பின்னோக்கி செயல்படுத்த முடியாது என்பதை நீதிமன்றம் ஏற்றுள்ளது .


* அரசாணை எண் 37ல் பிரிவு 6 vi ன் நோக்கமே 10.03.2020க்கு முன்னால் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதே .


* 10.03.2020க்கு முன்னால் உயர்கல்வி முடித்தவர்களுக்கு மேல் முறையீட்டில் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது . தீர்ப்பு வந்தவுடன் பதிவு செய்கிறேன்


* இன்று வழங்கப்பட்ட அப்பில் தீர்ப்பில் அரசாணை எண் 95 ன் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . நீதிமன்றம் ஏற்க வில்லை 


* .In the instant case, the Writ Petitioner has, admittedly, acquired 


additional qualification by getting proper permission prior to issuance of 


G.O.(Ms)No.37 and it is his second incentive increment and in fact, the same 


also had been considered and granted by the appellants by proceedings, dated 


19.12.2019 with effect from 01.07.2017.  Hence, the argument of the 


appellants that in view of the clarificatory order, the Writ Petitioner is 


not entitled for the incentive increment, cannot be sustained and 


accordingly, rejected.  The learned Judge, had rightly, arrived at a 


conclusion that the Writ Petitioner is entitled for the grant of second 


incentive increment and the same cannot be denied in view of G.O.(Ms)No.37 


and G.O.(Ms)No.95, which needs no interference and accordingly, sustained. என்று இரு நபர் அமர்வு 10.03.2020 க்கு முன்பாக முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது.


* இது வரை இரண்டு அப்பில் தீர்ப்புகள் 10.03.2020க்கு முன்பாக முடித்தவர்களுக்கு தீர்ப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது .தனி நபர் தீர்ப்புகள் வந்தவுடன் பதிவு செய்கிறேன் .


* 1500க்கு மேற்பட்ட உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு கோரிய தொகுப்பு வழக்குகளின் தீர்ப்பு வியாழன் அன்று அளிக்கப்பட கூடும் .


* 10.03.2020க்கு முன்பாக முடித்தவர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை நீதிமன்றம் நாடுவதன் மூலம் மட்டுமே பெற முடியும் .


* தொடர்ந்து உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை கோரி வழக்கு தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம் .


* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706




No comments:

Post a Comment

Post Top Ad