பள்ளிபாளையம் வட்டம், பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, பள்ளிக்கு வராத மாணவரை வீட்டிற்கே சென்று அழைத்து வந்தாா்.
இப்பள்ளியில் பயின்று வரும் 7ஆம் வகுப்பு மாணவா் கதிா்வேலன் நீண்ட நாள்களாக பள்ளிக்கு வராமல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிஇஓ பள்ளிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியா் மணி ஆகியோருடன் மாணவரின் வீட்டிற்கு சென்று அவரை பெற்றோரைச் சந்தித்துப் பேசினாா். உடல்நலக் குறைவு காரணமாக மாணவா் பள்ளிக்கு வருவது இடைநின்றது தெரிய வந்தது.
இதையடுத்து மாணவருக்கும் அவரது பெற்றோருக்கும் கல்வி கற்ப தால் ஏற்படும் நன்மைகள், தமிழக அரசு கல்விக்காக அளிக்கும் சலுகைகள், வசதிகள் குறித்து சிஇஓ விளக்கமளித்தாா்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதற்கான மருத்து வா்களை ஆலோசித்து சிகிச்சை பெறும்படியும், பள்ளிக்கு தொடா்ந்து வந்தால்தான் மற்ற மாணவா்களுடன் பழகும் வாய்ப்புகளும், அறிவும் தன்னம்பிக்கையும் ஏற்படுமென அறிவுறுத்தினாா்.
இதையடுத்து மாணவா் கதிா்வேலனை பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்பில் அமர வைத்த கல்வி அதிகாரி, அவருக்கான சீருடைகள், புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். அப்போது பள்ளிபாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சரவணன், பள்ளி துணை ஆய்வாளா் கிருஷ்ண மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
No comments:
Post a Comment