பிப்ரவரி 19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி; தமிழ் தாத்தா என்று அழைப்படும் உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் பிப். 19 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கே.பி.முனுசாமி கோரிக்கையை ஏற்று தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டாக்டர் உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment