TETOJAC - பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குருடன் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு - Asiriyar.Net

Wednesday, October 9, 2024

TETOJAC - பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குருடன் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு

 

பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு!



இன்று (08.10.2024) தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் டிட்டோஜாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை சென்னையில் அவர்களது அலுவலகங்களில் நேரில் சந்தித்துப் பேசினர். 


ஏற்கனவே 23.09.2024 அன்று டிட்டோஜாக் அமைப்புடன் மாண்புமிகு.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு அமைந்திருந்தது.


No comments:

Post a Comment

Post Top Ad