அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற 31-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 20 சதவிகிதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், நிரந்தர ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400 முதல் அதிகபட்சமாக ரூ. 16,800 வரை போனஸ் தொகையாக பெறுவார்கள்.
தமிழக பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.75 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ. 369.65 கோடி கருணைத் தொகையை போனஸாக பெறவுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 3,000 கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment