தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது - உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு .
மேற்குறிப்பிட்ட 1862 பணியிடங்களுக்கு முதல் கட்டமாக ஒன்றியத்திற்குள் மட்டுமே பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு 13.06.2024 அன்று நடைபெற உள்ளது.
ஒன்றியத்திற்குள் பணிநிரவல் மாறுதல் வழங்கப்பட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு மாண்பைமிகு உச்சநீதிமன்றத்தில் TET சார்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்பட்ட பின்னர் உள்ள காலிபணியிடத்தில் இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்படும் .
Click Here to Download - Deployment Counselling For SG Teachers - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment