தமிழகம் முழுதும் 60,000 கம்ப்யூட்டர் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த மே 29ம் தேதி, கம்ப்யூட்டர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது.
'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தில் பணிபுரிந்த 10,000க்கும் மேற்பட்டோரும், இந்த தேர்வு எழுதி உள்ளனர். அதனால், 50க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் பட்டதாரி ஆசிரியர்கள், நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வீட்டின் முன், தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருச்சி, தென்னுார், அண்ணா நகர் பகுதியில் உள்ள அமைச்சர் வீட்டின் முன், போராட்டம் நடத்தியவர்கள் கூறியதாவது:
அரசு குறிப்பிட்டுள்ள தகுதி அடிப்படையில், கம்ப்யூட்டர் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வேலை வழங்குவதற்கான தேர்வு இது. ஆனால், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் உள்ளவர்களையும், தேர்வு எழுத அனுமதித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், முறையான அறிவிப்பும் இல்லாமல், தேர்வு நடைபெற்று உள்ளது. அதனால், கம்ப்யூட்டர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், என்று போராட்டம் நடத்தினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment