மகாராஷ்டிர மாநிலத்தில் 2005, நவம்பருக்குப் பின் பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க அம்மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக மகாராஷ்டிர அரசு ஊழியா்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலா் விஸ்வாஸ் கத்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘2005, நவம்பருக்கு முன் அரசுப் பணிக்காக தோ்ந்தெடுக்கப்பட்டு அதன்பின் நியமன ஆணைகளைப் பெற்ற 26,000 மாநில அரசு ஊழியா்கள் மட்டுமே இதன்மூலம் பயனடைவாா்கள்.
2005, நவம்பருக்கு முன் பணியில் சோ்ந்த 9.5 லட்சம் அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஏற்கெனவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
ஆறு மாதத்துக்குள் பழைய அல்லது புதிய ஓய்வூதிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தோ்ந்தெடுத்து அதற்கான உரிய ஆவணங்களை இரண்டு மாதங்களில் தகுதியுள்ள 26,000 ஊழியா்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சமா்ப்பிக்குமாறு அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment