ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 17, 2024

ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

 

தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நிய மனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் (அரசாணை எண்:243ல்) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. 


இது ஆளும் கட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த யர்களில் ஒன்றரை லட்சத் திற்கும் மேல் தொடக்க கல்வியில் உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றால் தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.


இந்நிை லயில் சமீபத்தில் வெளியான அரசு உத்தரவு தொடக்க  கல்வியை முடக்கும் வகையில் உள்ளது.

அதாவது ஒன்றியம்  கல்வி மாவட்டத்திற்குள் நடந்து பதவி உயர்வு இனிமேல் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடக்கும் என்பதும் இடை நிலை ஆசிரியர்களுக்கு இருந்த பதவி உயர்வில் வைத்தும்' அந்த உத்தரவு வெளியாகிய தால் மாநில அளவில் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது.


அரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செய லாளர் சீனிவாசன் கூறியதாவது:

தி.மு.க. அரசு மீண்டும் வந்தபோது ஆசிரியர் கள் அரசு ஊழியர்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் தற்போது தவிடு பொடியாகி விட்டன. பேச்சு வார்த்தைகள் பயனற்று போகின்றன. குறிப்பாக தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியின் உச்சத்தில் உள்ளனர்.

இதுவரை தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற னர். 20 ஆண்டுகள் நடை முறையை உடைத்து இந்த அரசு உத்தரவில் மாற்றம் கொண்டு வந் ததால் தொடக்கக்   கல்வியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் ஆரம்பப் பள்ளி தலை மையாசிரியர் பதவி உயர்வு பெற்ற பட்ட தாரி என ஒரு லட்சம் பேருக்கு பதவி உயர்வு - வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் தமிழாசிரியர் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த முன்னுரிமை பதவி உயர்வு இருந்தது.

பட்டியல் அடிப்படையில் தற்போது பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் மட்டும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


இது ஆரம்ப நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்வதை தடுக்கும். இடைநிலை ஆசிரியர்களின்" பதவி உயர்வும் பறிக்கப் பட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளிகளில் ஒரு காலத்தில் 1 முதல் 8 வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்களே கற்பித்தல் பணி செய்தனர். அங்கு தலைமையாசிரியர்களாக மூத்த இடைநிலை பதவி ஆசிரியர்களே உயர்வில் நியமிக்கப்பட்டனர்.


நாங்கள் நேரடி பட்ட தாரி ஆசிரியர் நியமனத் திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இடைநிலை ஆசிரியருக்குப் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க வேண் டாம் என்கிறோம்.5000 ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை 100 சதவீதம் உறுதிப் படுத்த ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிப் பது எந்த வகையில் நியாயம்.


இந்த உத்தரவு வெளி யிடும் முன் சங்கங் களின் கருத்தை ஏன் கேட்கவில்லை. மாநில சீனியாரிட்டியால் பாதிப் பது 90 சதவீதம் ஆசி ரியைகள். பதவி உயர்வை புறக்கணிக்கும் முடிவில் அனைத்து ஆசிரியர்களும் உள்ளோம் என்றார்.



சங்கங்களை முடக்கும் நடவடிக்கையா

இந்த உத்தரவு பின்னணியில் தொடக்க கல்வியில் சங்க ரீதியாக வலுவாக செயல் படும் நிர்வாகிகளை வேறு மாவட்டங்களுக்கு தூக்கியடித்து சங்க செயல்பாடுகளை முடக்க வேண்டும் என கல்வி அதிகாரிகள் நினைக்கின்றனர். 


மேலும் மாநில அளவில் பணியிடமாற்றம் செய்து மீண்டும் சொந்த மாவட்டங்களுக்கு ஆசிரியர் செல்ல விரும்பினால் ஜோராக 'டிரான்ஸ்பர் பேரம்' நடத்தலாம் என அதிகாரிகள் சிலரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களிடம் முதல் வர் ஸ்டாலின் பேச வேண்டும் என சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.




Post Top Ad