நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 19, 2024

நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு?

 


திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு : வரையான அனைத்து வகையான பள்ளிகளுக்கும் , வருகை நாட்களை ஈடுசெய்யும் விதமாக நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மாவட்டம்


2023 டிசம்பர் மாதத்தில் மிக்ஜாங் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக சென்னை மாவட்டத்தின் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

எனவே அவ்விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் கீழ்க்காண் அட்டவணையின் படி பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 17.12.2023 அன்று பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் விதமாக கீழ்க்கண்ட நாட்கள் பள்ளி வேலை அறிவிக்கப்படுகிறது . தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள நாட்களில் பள்ளி முழு வேலை நாளாக செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . நாட்களாக CLOGUILD 06.01.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து , பிரிதொரு நாளில் அதனை ஈடுசெய்திட தலைமையாசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் 


திருப்பத்தூர் மாவட்டம்


தஞ்சாவூர் மாவட்டம்

ஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 20.01.2024 அன்று பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றிடவும் அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .
விழுப்புரம் மாவட்டம்


கனமழை காரணமாக மழை திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 08.01.2024 அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடு மறையினை ஈடு செய்யும் வகையில் 20.01.2024 சனிக்கிழமை அன்று வட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பணி நாளாகும் எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வககிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் வண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .


திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 10-11-2022 அன்று மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொட 20-01-2024 சனிக்கிழமை அ அவ்விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் அதவேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது .


Post Top Ad