பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு விடுதி உணவு கட்டணம் அதிகரித்து வழங்க தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 23, 2024

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு விடுதி உணவு கட்டணம் அதிகரித்து வழங்க தமிழக அரசு உத்தரவு

 



பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவ, மாணவியர்களின் உணவு கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது.



இது குறித்து அவை வெளியிடுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது: 

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப் பட்டோர் ,மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ, மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. விடுதி உணவுக்கட்டணம் உயர்த்தி வழங்குவதால் கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரையில் ஏற்படும் கூடுதல் தொகையான ரூ.9 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 200-ஐ வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Post Top Ad