சும்மா படிச்சுக்கிட்டே இருக்காதீங்க - அப்பப்ப குட்டி பிரேக் எடுங்க! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 29, 2024

சும்மா படிச்சுக்கிட்டே இருக்காதீங்க - அப்பப்ப குட்டி பிரேக் எடுங்க!

 

பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில், எப்படி படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம், கவனசிதறல்களை குறைப்பது எப்படி என்பது குறித்து, உளவியல் ஆலோசகர் கவிதா பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இதை பின்பற்றினாலே, முழு மதிப்பெண்கள் உறுதியாக பெறலாம்.


அட்டவணை தயாரித்தல்எதையும் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற டயலாக்குக்கு ஏற்றாற்போல், பொதுத்தேர்வு அட்டவணை, இடைப்பட்ட நாட்கள் எத்தனை, தினசரி படிக்க வேண்டிய பாடங்கள் குறித்த அட்டவணையை முதலில் தயாரித்து கொள்ளுங்கள். அனைத்து பாடங்களிலும் குறிப்பிட்ட பகுதியாவது, தினமும் படிக்க வேண்டுமென்பதை உறுதி கொள்ளுங்கள். கடின பாடங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்கிவிடுங்கள். ஒருமுறை எழுதி பார்ப்பது, இருமுறை படிப்பதற்கு சமம்.


ஆரோக்கிய உணவு

சுற்றுச்சூழல் மாற்றம், புதிய வகை நோய்கள் என, தினசரி மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. பருவக்கால நோய்களில் இருந்து விடுபட, உடலின் ஆரோக்கியம் கிரீன் சிக்னலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீண்ட நேரம் படிக்க முடிவெடுத்தால், அருகில் வாட்டர் பாட்டில் இருப்பது அவசியம்.


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தேர்வு நெருங்குவதால், அடிக்கடி துரித உணவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இறுதிநேரத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டால், ஓராண்டு முழுவதும் படித்த படிப்பு வீணாகி விடும்.


குட்டி பிரேக் எடுக்கணும்

படிக்கும் போது எடுக்கும் குட்டி பிரேக், மூளையை இன்னும் சுறுசுறுப்பாக்கும். தேர்வு துவங்கிவிட்டால், விளையாட்டு, பொழுதுபோக்கை மூட்டை கட்டி விடுவது நல்லதல்ல. 


நம் மூளைக்கு எனர்ஜி கொடுப்பதே, சுறுசுறுப்பான உடல், மன இயக்கம் தான். 6-8 மணி நேர துாக்கம், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நடைப்பயிற்சி, தியானம், யோகா அல்லது பாட்டு கேட்பது, டான்ஸ் ஆடுவது என, நம்மை நாமே பிரஷ் ஆக வைத்து கொள்ள வேண்டும்.


பெற்றோரே...இது உங்களுக்கு! பெற்றோரே. உங்கள் குழந்தையை விட, அவர்கள் பெறும் மதிப்பெண்கள் பெரிதல்ல. வீட்டில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி கொடுங்கள். 


சத்தான உணவு சமைத்து கொடுப்பது, சிறிது நேரம் அவர்களுடன் பேசுவது, அவர்களிடம் உள்ள பயத்தை போக்கி தன்னம்பிக்கை தருவது அவசியம். டார்கெட் கொடுத்து அவர்களிடம் சுமையை ஏற்றாமல், ரிலாக்ஸாக படிக்க உதவுவதே சிறந்த பேரன்டிங்!.


Post Top Ad