10,ம் 12ம் வகுப்பில் தோல்வி; ஆனால் கல்லூரியில் முதலிடம்: ஆட்டோ டிரைவரின் வெற்றிக் கதை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 15, 2024

10,ம் 12ம் வகுப்பில் தோல்வி; ஆனால் கல்லூரியில் முதலிடம்: ஆட்டோ டிரைவரின் வெற்றிக் கதை!

 



0ம், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத ஒரு மனிதர் பட்டப்படிப்பில் கல்லூரியின் முதல் மாணவராக மாறியிருக்கின்ற ஆச்சரிய நிகழ்வு கேரள மாநிலம் திருச்சூரில் அரங்கேறி இருக்கிறது.


கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தர் ஆட்டோ ஓட்டுநர் அபிலாஷ் என்பவர் தான் இந்த ஆச்சரிய நிகழ்வை ஏற்படுத்திக் காட்டியிருக்கிறார். இவர் கல்லூரி விண்ணப்பம் வாங்கியதே சற்று வித்தியாசமான சூழ்நிலையில் தான். இவரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கேரளா வர்மா கல்லூரியில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கிக்கொண்டு வருமாறு அபிலாஷிடம் கூறியிருக்கிறார். அதன்படி, அபிலாஷும் விண்ணப்பம் வாங்கிக் கொடுத்துள்ளார்.


விண்ணப்பம் வாங்கிய பின்புதான் பக்கத்து வீட்டுக்காரர் மகள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த விண்ணப்பம் தான் அபிலாஷ் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.


ஆம், பக்கத்து வீட்டுக்காரர் முதலில் இந்த விண்ணப்பத்தை தனது மகளுக்கு உதவாது என்பதை உணர்ந்து அதை வேறு யாரவது கல்லூரியில் படிக்க விருப்பமிருந்தால் அவர்களுக்கு கொடுத்துவிடு என்று அபிலாஷிடம் கூறியிருக்கிறார். விண்ணப்பத்தை வாங்கிக்கொண்ட அபிலாஷ், விளையாட்டுத் தனமாக அதை தான் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.


12ம் வகுப்பு தேர்ச்சிபெறாதவர் எப்படி கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும் என்கிறீர்களா? பள்ளியில் நேரடியாகச் சென்றதில் தான் அபிலாஷ் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற முடியாமல் இருந்தார். எனினும் கேரளாவில் இருக்கும் திறந்தவெளி பள்ளிக்கூடத்தின் வாயிலாக 12ம் வகுப்பு முடித்து இருந்திருக்கிறார்.


இது அவருக்கு கைகொடுக்க, கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்க, கல்லூரியிலும் அவருக்கு சீட் கிடைத்துள்ளது. பிஏ தத்துவ படிப்பில் சேர்ந்தவர், அதில் 88 சதவீத மதிப்பெண்களை எடுத்து ஊர் மக்களை அசத்தியுள்ளார். கல்லூரியில் டாப்பாராக வந்ததுக்கு பேராசிரியர் சங்கரன் நம்பியார் விருது மற்றும் ஷியாம் மெமோரியல் டாப்பர் என்டோவ்மென்ட் பட்டத்தையும் அபிலாஷ் வென்று அசத்தி இருக்கிறார்.


பிஏ-வோடு நின்று விடாமல், பிஎட் படிப்பையும் படித்த அபிலாஷ், அதில் 100 சதவீத வருகையோடு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். பகலில் கல்லூரிக்குச் செல்வது, இரவில் ஆட்டோ ஓட்டுவது என செயல்பட்டு சாதனை படைத்திருக்கிறார். பிஎட் முடித்த பின்பு ஆசிரியராக பணியில் சேர்ந்திருக்கிறார்.

ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் மூட தற்போது முழுநேரமாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்.


32 வயதான அபிலாஷ் தனது வாழ்க்கையில் பல தொழில்களில், பல ரோல்களில் இருந்துள்ளார் எனலாம். 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பின்னர், கட்டுமானப் பணிகளுக்குச் சென்றார். அவர் பிளஸ் டூவிலும் தோல்வியுற்ற பின் போர்ட்டர் ஆனார். எனினும் அவர் தனது 22 வயதில் ஓபன் ஸ்கூல் திட்டத்தின் மூலம் பிளஸ் டூவை முடித்தார்.


பின்னர், அபிலாஷ் ஐ.டி.சி.யில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா முடித்தார். அவருக்கு வேறு வருமானம் இல்லாததால், அவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆனார். இது தவிர, அவர் ஒரு நாட்டுப்புற பாடகரும்கூட. நாட்டுப்புற பாட்டு, இசை கருவி, பூசாரி, கால் பந்து விளையாட்டு, பேருந்து கிளீனிங், இரவு பாடசாலை மற்றும் கிரேன் ஆபரேட்டர் போன்ற பல தொழில்களையும் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.


திரிச்சூர் நடதாராவைச் சேர்ந்த மறைந்த கரப்பன் மற்றும் வள்ளியம்மா ஆகியோரின் மகன் இந்த அபிலாஷ். அபிலாஷ் பட்டபடிப்பு படிக்கும் போது அவரின் தந்தை காலமானார். தற்போது, ​​திருச்சூரில் உள்ள சியாரத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பகுதி நேர பாடமாக பி.ஜி.டி.சி.ஏ படித்து வருகிறார் அபிலாஷ்.


Post Top Ad