80/85/90/95/100 வயதில் ஓய்வூதியம் வழங்குதல் - அறிவுரைகள் - Govt Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 21, 2024

80/85/90/95/100 வயதில் ஓய்வூதியம் வழங்குதல் - அறிவுரைகள் - Govt Letter

 

பார்வை ஒன்றில் உள்ள அரசாணையின் பத்தி-3ல் பிற இனங்களுடன் கீழ்க்கண்டவாறு ஆணையிடப்பட்டுள்ளது.


ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஒய்வூதியதாரர் 80/85/90/95/100 வயதை நிறைவு செய்யும் மாதத்தின் முதல் நாள் முதலோ அல்லது 1.1.2011 அன்றோ இதில் எது பின்னரோ, அன்று முதல் கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்”


2. 80/85/90/95/100 வயது முடிந்த பிறகு எந்த நாளிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்களை, பலதரப்பட்ட ஓய்வூதியர்கள் எழுப்பியுள்ளதாக பல கடிதங்கள் மூலம், அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


3. பார்வை-1ல் படிக்கப்பட்ட அரசாணையின் பத்தி-3, வரிசை எண்.4-ற்கு பார்வை 2-ல் காணும் கடிதத்தில் மத்திய அரசு வெளியிட்ட தெளிவுரையின் அடிப்படையில் கீழ்க்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறது:-


"80/85/90/95/100 வயது நிறைவு செய்த ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது பிறந்த நாள் எந்த மாதத்தில் வருகிறதோ, அந்த மாதத்தின் முதல் நாளிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கலாம். உதாரணமாக, ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் 80 வயதை ஆகஸ்ட் 2008-ல் நிறைவு செய்தால், அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் 1.8.2008 முதல் வழங்கலாம். ஆகஸ்டு முதல் நாளன்றே 80 வயது நிறைவு செய்து பிறந்த நாளாகக் கொண்ட ஓய்வூதியதாரர்/ குடும்ப ஓய்வூதியதாரருக்கும் 1.8.2008 முதல் கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம்.

Post Top Ad