அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஜனவரி 8 முதல் 10 வரை பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் - Instructions - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 6, 2024

அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஜனவரி 8 முதல் 10 வரை பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் - Instructions

 

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிநர்கள் கவனத்திற்கு பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோரின் செயல்முறைகளின் படி 8 முதல் 10 வரை அனைத்து வகை பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு கீழ்க்கண்ட செயல்பாடுகள் பள்ளியில் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


1. அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகை பயன்படுத்தும் வண்ணம் இருப்பதை உறுதி செய்தல்


2. ஆசிரியர் அறைகள் ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தம் செய்தல்.


3. பள்ளி அலுவலகம் மற்றும் தலைமை ஆசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல்.


4. பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாடப் பொருட்கள் கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும் மேலும் அனைத்து வகுப்பறைகளும் சுத்தம் செய்து நன்றாக நீரால் தூய்மை செய்து பள்ளியில் உள்ள கட்டிடங்களும் வளாகமும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.


5. காலை மதிய உணவு திட்டத்திற்கான சமையலறை நன்கும் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன் சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும் மேலும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல்.


6. பள்ளி வளாகத்தில் உள்ள புதர்கள் கலைச் செடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தல் மேலும் பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரித்தால் கூடாது பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்தல் வேண்டும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை இனம் பிரித்து மறுசுழற்சிக்காக உள்ளூர் தி நிர்வாகத்திடம் திடக்கழிவுகளை ஒப்படைத்தல் வேண்டும்.


7. தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை முறையாக சுய்மை செய்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்திட வேண்டும்.


மேற்குறிப்பிட்ட தூய்மை நிகழ்வினை வருகின்ற திங்கள் ,செவ்வாய் மற்றும் புதன்(8.1.24 முதல் 10.1.24) ஆகிய மூன்று தினங்களில் பள்ளிகளில் செயல்படுத்தி புகைப்படங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் புகைப்படம் ஆனது இச்செயல்பாடுகள் நடைபெறுவதற்கு முன்(BEFORE ),செயல்பாடுகள் செய்யும் பொழுது(WORK PROCESS) மற்றும் முடிந்த பிறகு (AFTER ) என்று மூன்று புகைப்படங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என்று அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் இப்பணியினை பள்ளிகளில் செயல்படுத்தி பள்ளி தூய்மை நிலையினை உறுதி செய்ய வேண்டும் என்ற தகவலை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து இப் பணி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மேலும் இதற்கான நிதி ஏதேனும் தேவைப்படும் பள்ளி மானியம் அல்லது பராமரிப்பு மானியத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் YOUTH AND ECO CLUB சார்ந்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள காய்கறி தோட்டம் அமைத்தல் என்ற நிதியில்  தோட்டம் அமைத்தல் மற்றும் மேற்கண்ட நிகழ்வுகளை ஏதேனும் தொகையினை பயன்படுத்தி இப்ப பணியினை சிறப்பாக செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் திருப்பத்தூர் மாவட்டம்.


தூய்மை செய்வதற்கு முன்பு புகைப்படம், தூய்மை செய்யும் போது புகைப்படம், தூய்மை செய்து முடிந்த போது புகைப்படம் 3 வகையான புகைப்படங்களை EMIS - ல் update செய்ய வேண்டும்.


எம் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் SMC உறுப்பினர்கள் உதவியடன் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்து அதன் புகைப்படங்களை


  • Photo Before Cleaning
  • Photo During Cleaning Process
  • Photo After Cleaned Places


Post Top Ad