புதிய ஆசிரியர்கள் நியமனம் - 'தரமான கல்வியை எப்படி தர முடியும்?' - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 6, 2024

புதிய ஆசிரியர்கள் நியமனம் - 'தரமான கல்வியை எப்படி தர முடியும்?'

 

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் 20,000 இடைநிலை ஆசிரியர்களும், 15,000 பட்டதாரி ஆசிரியர்களும் ஓய்வு பெற்றிருப்பர்.


ஆனால், இதை மறைத்து விட்டு, 2023 --24ல் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக, அரசு அறிவித்தது. அதிலும் இப்போது, 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அரசு பள்ளிகளை மேம்படுத்த, குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய நிலையில், வெறும் 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது.


மேலும், 3,800 துவக்கப் பள்ளிகளில், 5 வகுப்புகளை கையாள தலா, ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். 25,618 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், சராசரியாக ஒரு பள்ளிக்கு, 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.


இவ்வளவு குறைவான ஆசிரியர்களைக் கொண்டு, அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?


-ராமதாஸ்,

பா.ம.க., நிறுவனர்.


Post Top Ad