G.O 751 - நாளை (04-12-2023) பொது விடுமுறை - தமிழக அரசு அரசாணை - Asiriyar.Net

Sunday, December 3, 2023

G.O 751 - நாளை (04-12-2023) பொது விடுமுறை - தமிழக அரசு அரசாணை

 




 “மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click Here to Download - G.O 751 - Public Holiday Declaration On 04 -12 - 2023 - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad