அரையாண்டுத்தேர்வு சிறப்பாக நடத்திட தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 11, 2023

அரையாண்டுத்தேர்வு சிறப்பாக நடத்திட தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - CEO Proceedings

 





1) மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணை தெரிவிக்கவும் மற்றும் பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.


2) மாணவர்களுக்கு தேர்வு எண் வழங்கப்பட்டதை உறுதிசெய்யவேண்டும்.


3) தேர்வறையில் உள்ள கரும்பலகையில் அறைக்கு ஒதுக்கப்பட்ட மாணவர்களின் விவரம் வகுப்பு வாரியாக எழுதவேண்டும் (முற்பகல்/பிற்பகல்).


4) மாணவர்கள் எந்த அறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை தகவல் பலகையில் (Notice Board). அனைவருக்கும் தெரியும் வகையில் ஒட்ட வேண்டும். 5) வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கான தேர்வறை ஒதுக்கீடு விவரங்கள் தெளிவாக வைத்திருத்தல் வேண்டும். மாணவர்களுக்கு வகுப்பறையில் தெரிவிக்க வேண்டும்.


6) மாணவர்களுக்கு அறை ஒதுக்கப்படும்போது ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத வகை செய்ய வேண்டும்.

7) 6 முதல் 12 வகுப்பு தேர்வுகளுக்கு அனைத்து வகை ஆசிரியர்களையும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.


8) அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வுப்பணி ஒதுக்கீட்டை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தேர்வு நேரங்களில் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். 9) தேர்வறையில் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியைத்தவிர செல்போன் பேசுவது, செய்தித்தாள் - வாசிப்பது, விடைத்தாள் திருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.


10) பொதுத்தேர்வை போல ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் மணியடிக்க வேண்டும். மணி அடிக்கும் நேர விவரத்தை மணிஅடிப்பவருக்கும் தெரிவித்து சரியாக கடைபிடிக்க வேண்டும்.

11) வினாத்தாள் வழங்கவும், தேர்வு முடிந்த பின் விடைத்தாள் பெறவும் உரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீடு செய்ய, விடைத்தாளுடன் வினாத்தாள், மதிப்பெண் பட்டியல், E-SLIP விவரங்கள் அனைத்து பூர்த்தி செய்து தலைமையாசிரியர் ஒப்பத்துடன் வழங்கவேண்டும்,

12) மாணவர்களின் வருகை பதிவேடு தினமும் குறிக்க வேண்டும்.

13)விடைத்தாட்களை வகுப்பு, பிரிவு வாரியாக உரிய எண்ணிக்கையின்படி கட்டி ஒப்படைக்க வேண்டும்.


14)மாணவர்களின் விடைத்தாள் முதல் பக்கத்தை காலியாக வைக்க அறிவுறுத்த வேண்டும். முதல் பக்கத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பொதுத்தேர்வை போல ஒவ்வொரு பக்கவாரியாகவும், வினாவாரியாகவும், மதிப்பெண் விவரங்களை விடைத்தாள் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.


Click Here to Download - Half Yearly Exam Instructions to HM's -  CEO Proceedings - Pdf



Post Top Ad