திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றும் முருகன் (52) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் சிலர், பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்று முருகனை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பிளிகை போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்து தலைமை ஆசிரியரை மீட்டனர். சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த 2 மாதங்களாக முருகன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment