ஜாக்டோ ஜியோ ( 09.12.2023 ) - மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைப்பு - Asiriyar.Net

Thursday, December 7, 2023

ஜாக்டோ ஜியோ ( 09.12.2023 ) - மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைப்பு

 

ஜாக்டோ ஜியோ ( 09.12.2023 )- மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைப்பு


மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை முன்னிட்டு ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் 09.12.2023 அன்று நடைபெற திட்டமிருந்த மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.


மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை முன்னிட்டு ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் 09.12.2023 அன்று நடைபெற திட்டமிருந்த மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர்) மிக்ஜாம் புயலின் கோரத் தாண்டவத்தினால் உருக்குலைந்துள்ளது. தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மக்களின் துயரைப் போக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளளது. இந்த நிவாரணப் பணிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இத்தகைய மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் நிவாரணப் பணிகளுக்கு நாம் தோளோடு தோள் நிற்பதோடு மட்டுமல்லாமல், ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்து நிறைவேற்றும் முயற்சியாக, எதிர்வரும் 09.12.2023 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திட்டமிட்டிருந்த மறியல் போராட்டத்தினை ஒத்திவைக்குமாறு பெரும்பான்மையான ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு அமைப்புகளின் நிர்வாகிகள் கோரிக்கைகள் வைத்தனர்.


பெரும்பான்மையாக கருத்தின் அடிப்படையிலும் கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் எதிர்வரும் 09.12.2023 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திட்டமிட்டிருந்த மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. விரைவில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்ட இயக்க நடவடிக்கைகளை நடத்துவதற்கான தேதியினை இறுதி செய்து, விரைவில் ஜாக்டோ ஜியோ அதற்கான அறிவிப்பினை வெளியிடும். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ



Post Top Ad