தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - SMC 13.10.2023 - விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள் - Asiriyar.Net

Friday, October 13, 2023

தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - SMC 13.10.2023 - விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள்

 

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பு

(2023-2024ஆம் கல்வியாண்டு)

குழு உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

நம் பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது வருகிற 13.10.2023 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.


விவாதிக்க வேண்டியக் கூட்டப்பொருள்:

1. பள்ளி மேலாண்மைக் குழு - துணைக் குழுக்கள் அமைத்தல்

2. பள்ளி வளர்ச்சி சார்ந்து விவாதித்து தேவையின் அடிப்படையில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றுதல்


தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

• பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்வதை உறுதி செய்யவேண்டும்.

• முந்தைய மாத பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டத்தில் விவாதித்த தீர்மானங்களின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கவும்.

• ITK தன்னார்வலர்கள் SMC குழுக் கூட்டத்தில் பங்கு கொள்வதை உறுதி செய்யவும். 'கூட்டம் துவங்கும் முன்னர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிடுதலை உறுதிசெய்யவேண்டும்.

• இக்கூட்டதின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுத் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட எழுத்துப்பூர்வ அழைப்பினை உறுப்பினர்களுக்கு பள்ளி மாணவர்கள் வழியாக கொடுத்தனுப்பி அனைவரின் பங்கேற்பினை உறுதி செய்யவேண்டும்.


இப்படிக்கு,

தலைமையாசிரியர்

(பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பாளர்)

Post Top Ad