BEO போட்டித் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் TRB வெளியீடு - Asiriyar.Net

Tuesday, October 3, 2023

BEO போட்டித் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் TRB வெளியீடு

 



வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான 2023 - ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் : 01 / 2023. நாள் .05.06.2023 - ன்படி 10.09.2023 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் ( Optical Mark Recognition ( OMR ) ) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது மேற்காணும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) வினாத்தாள் 4 ' வகைக்குரியது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.gov.in- வ் வெளியிடப்பட்டுள்ளன. 


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 03.10.2023 முதல் 10 .10.2023_பிற்பகல் , 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வுவாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது . 


அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ( Standard Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும் . கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . 


தேர்வர்கள் வினாத்தாள் ( " A " series question paper ) TRB website- ல் வெளியிடப்பட்டுள்ளதற்குரிய தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபணை ( objection ) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் . 


சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 



மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் ( PWD candidates ) பகுதி- B- ல் வினா எண் 3 } முதல் 180 வரை உள்ள வினாக்களுக்கு மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்கலாம் . பகுதி - 4 - ல் உள்ள 01 முதல் 31 வரையிலான கட்டாயத் தமிழ் மொழி பகுதியின் வினாக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் ( PWD candidates ) தெரிவிக்கக் கூடாது.


மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது 


candidates are instructed to follow the procedure as follows:


  • Step 1 – Click the link provided in the website
  • Step 2 – Login into the candidate Dashboard using registration id & password.
  • Step 3 – Click the objection tracker icon. .
  • Step 4 – Read the instructions carefully and accept the declaration.
  • Step 5 – To view the Question paper ( “A” series question paper) – “Click here to view ‘A’ series Question Paper”.
  • Step 6 – Read the instructions carefully before raising the objections.
  • Step 7 – Raise the objections in the given field.
  • Step 8 – Upload the supporting document and click Save and Submit.
  • Step 9 – After Successful OTP verification, the system will move to the applicant OT landing page.


Click Here to Download - Tentative Key


Click Here - Objection Tracker


No comments:

Post a Comment

Post Top Ad