போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை விபரம் - மாவட்ட வாரியாக - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 3, 2023

போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை விபரம் - மாவட்ட வாரியாக

 

சமவேலைக்கு சம ஊதியம்" கோரி சென்னை DPI யில் போராடிவரும் SSTA _ இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி (1முதல்3வகுப்பு) மற்றும் 4 & 5ம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.


மாவட்ட வாரியாக பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை..12402.


பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோர் வீட்டிலிருக்காமல் களத்திற்கு நேரில் வந்தால் தான் கோரிக்கையை வென்றிட முடியும் அதனால் தங்களது ஆதரவை நேரடியாக அளிக்க முன்வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*


*இந்த பள்ளி மற்றும் பயிற்சி புறக்கணிப்பில் இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்காக ஆதரவு கரம் நீட்டிய மூத்த ஆசிரியர் இயக்க தோழமைகளுக்கும், நண்பர்களுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Post Top Ad