அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் - Ministers launched an awareness rally to increase student enrollment in government schools அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் வருகிற 28-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று சென்னை அரசு மாதிரிப் பள்ளியில் பிரசார வாகனத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர். மேலும், அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
இந்த அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி ஏப்ரல் 28-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இந்த பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளி கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment