என்ன படித்தால் வேலை கிடைக்கும் என்பதை விட, மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதை வைத்து தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஐடி, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் இல்லையா என்று கேட்டால், எந்த குரூப்பை தேர்ந்தெடுத்தாலும் பெரும்பாலான மாணவர்கள் ஐ.டி வேலைக்குத்தான் செல்கிறார்கள். இதற்கு ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலான மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஐடி, டேட்டா சயின்ஸ் போன்ற படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர்.
மேலும், 2023ல் படிப்பில் சேரும் ஒரு மாணவன், 2027ம் ஆண்டு படித்து வெளியே வரும்போது டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை அடைந்து இருக்கும். செயற்கை நுண்ணறிவு திறன் அதிகமாகி வரும் இந்த சூழலில் இனிமேல் இதுபோன்ற படிப்பில் அதிக அளவிலான வேலைவாய்ப்பை எதிர்பார்க்க முடியாது.
உலகம் விர்ச்சுவல் டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. அது செய்யாத ஒரு திறமையான வேலையை செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வளாகத் தேர்வின் மூலம் மாணவர்களை தேர்வு செய்யும் முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் கூட, கொரோனா காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஐ.டி. துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக தங்களது பணியாளர் தேர்வை குறைத்துக் கொண்டுள்ளன.
ஐ.டி. துறையின் மீதான மாணவர்களின் ஆர்வம் இந்த ஆண்டு குறைந்துள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ‘‘என்ன படித்தால் வேலை கிடைக்கும் என்பதை விட உனக்கு என்ன தெரிகிறது என்பதை வைத்து தான் வேலை கிடைக்கும். எனவே கூடுதலாக உங்கள் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படிப்பிற்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளது. அதனுடன் கூடுதலாக கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அது எதிர்காலத்திற்கு நல்லது. இன்ஜினியரிங் படிப்பிற்கு பிறகு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு படிப்பு ஆர்க்கிடெக் தான். இதற்கும் நல்ல எதிர்காலம் உண்டு. இதற்கான என்.ஏ.டி.ஏ (நாடா) நுழைவு தேர்வுகளை எழுதி மாணவர்கள் தங்களை தயார் செய்ய வேண்டும். கவுன்சலிங் செல்லும் மாணவர்களுக்கு கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் கவனம் அதிகமாக இருக்க வேண்டும். எப்படி நம் பேங்க் ஓ.டி.பி.,ஐ யாரிடமும் பகிர மாட்டோமோ, அதேபோல் நம் கவுன்சலிங் டேட்டாவை யாரிடமும் கொடுக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment