பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 15, 2023

பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு

 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்(பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுடன்


2018- 2019-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களில் சேர்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை முடித்துக் கொள்ள 5 ஆண்டுகள் காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ளது.


எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் 2018- 2019-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் அரியர் வைத்திருந்தால், கடைசி வாய்ப்பாக ஏப்ரல் இறுதியில் நடக்கவுள்ள தேர்வை எழுதிக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஏப்.20-ம் தேதிக்குள் தாங்கள் பயின்ற கல்லூரி வழியாக விண்ணப்பம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.Post Top Ad