10ஆம் வகுப்பு கணித தேர்வில் Grace mark வழங்க கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 16, 2023

10ஆம் வகுப்பு கணித தேர்வில் Grace mark வழங்க கோரிக்கை

 

10 ஆம் வகுப்பு கணித தேர்வில் வினா எண் 9 க்கு∞ சரியான விடையாக இருந்தாலும் அது ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும்.மாணவர்களுக்கு புத்தகத்தில் Un defined ( வரையறுக்கப்பட வில்லை ) என்ற வார்த்தை மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு அந்த குறியீடு 11 th book ல் மட்டுமே உள்ளது.


 ஆசிரியர்களுக்கு அந்த குறியீடு ( not defined ) தெரிந்து இருந்தாலும் மாணவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.எனவே , இதனால் கிராமப்புற அரசு பள்ளி தமிழ் வழி மாணவர்களும் , நன்றாக படிக்க கூடிய மாணவர்களும் இந்த ஒரு மதிப்பெண்ணால் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் எந்த option எழுதி இருந்தாலும் grace mark வழங்க கணித பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஆகையால் அரசு பரிசீலித்து எந்த option எழுதி இருந்தாலும் மதிப்பெண் வழங்க விடைக்குறிப்பில் ( Answer key ) வழங்க வேண்டும்.
Post Top Ad