போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணிக்க முடிவு? - Asiriyar.Net

Sunday, January 1, 2023

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணிக்க முடிவு?

 வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கப்போவதாக முடிவு.


வரும் திங்கட்கிழமை அவர்களாக பயிற்சிக்கு சென்றுவிடுவார்கள் எனலாம் அல்லது போராட்டத்தை ஒடுக்க அரசு முயலலாம்


வரும் புதன்கிழமை வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த போராட்டம் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படப்போவதில்லை.


2ஆம் தேதி திங்கள் முதல் 4 ஆம் புதன் தேதிவரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடக்கவுள்ளது.


இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சியை அளிக்கப்போவதே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்தான்.மாநில கருத்தாளர்கள் மாவட்ட கருத்தாளர்கள் ஒன்றிய அளவில் பயிற்சியளிக்கும் கருத்தாளர்கள் என பெரும்பாலானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஞாயிற்றுகிழமை முடிவு எட்டப்படவில்லை எனில் திங்கட்கிழமை நடக்கும் பயிற்சியை புறக்கணித்து போராட்டத்தை தொடர்வது எனவும் அதற்கு மற்ற ஆசிரியர் சங்கங்களும் முழு ஆதரவை தரவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post Top Ad