பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கின்ற மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை மார்ச் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணைகளை தேர்வுத்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
அதன், தொடர்ச்சியாக பள்ளிகளில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் பணியும் நடக்கிறது. அறிவியல் பாடப்பிரிவு, தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியரில் அறிவியல் பாடப்பிரிவு, தொழில் பாடப் பிரிவுகளின் கீழ் தேர்வு எழுதுவோருக்கு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment