பள்ளிக் கல்வித் துறையில் அடுத்து என்ன? மாமல்லபுரத்தில் 3 நாள் ஆலோசனை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 25, 2023

பள்ளிக் கல்வித் துறையில் அடுத்து என்ன? மாமல்லபுரத்தில் 3 நாள் ஆலோசனை!

 அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்த பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான மாநில அளவிலான அதிகாரிகளின் மூன்று நாள் கூட்டம், மாமல்லபுரத்தில் வரும், 27ம் தேதி துவங்குகிறது.


தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, துறையின் வளர்ச்சி பணிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும், ஏற்கனவே உள்ள விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், அவ்வப்போது, மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.


இந்த கூட்டம் பெரும்பாலும், சென்னையிலும், சில நேரங்களில் சென்னை அல்லாத மாவட்டங்களிலும் நடத்தப்படும்.


இந்த வகையில், அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில், வரும், 27, 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ளது.


இதில், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள், இடைநிலை கல்வி மற்றும் தொடக்க கல்வி டி.இ.ஓ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.


இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


வரும், 30ம் தேதி, அரசு தேர்வுத் துறை சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான ஆயத்த பணிகள் குறித்து, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடத்தப்படுகிறது.


இதில், அனைத்து மாவட்ட சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது


Post Top Ad