1) வருமானவரி புதிய முறை அல்லது பழைய முறை எதுவாக இருந்தாலும் சென்ற ஆண்டு உள்ளது போல் வேறு மாற்றம் ஏதும் இல்லை.
2)வருமானவரி படிவத்தில் கழிக்கப்படும் வீட்டுக்கடன், LIC, PLI, இது போன்ற ரசீதுகள் அனைத்தும் 01.04.2021 முதல் 31.03.2022 க்குள் தேதி இருப்பவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
3)TPF or GPF, Lic, Pli, டியூஷன் கட்டணம் மட்டும், வீட்டுக்கடன் அசல் வருமானவரி விதிகளுக்கு உட்பட்ட இன்னும் பிற சேமிப்புகள் அனைத்தும் 1,50,000 க்குள் கழிக்க முடியும்.
4) CPS திட்டத்தில் உள்ளவர்கள் கூடுதல் சேமிப்பாக 50,000 Cps என சேர்த்து கழித்து கொள்ள முடியும்.
5) தொழில் வரி பிப்ரவரி 2022 இல் செலுத்தும் போது 1250 க்கு குறைவாக செலுத்தி உள்ளவர்கள். அகவிலை உயர்வு காரணமாக ஜனவரி மாத ஊதியம் மாற்றம் அடைந்து உள்ளது. எனவே அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 முடிய உள்ள ஆறுமாத ஊதியத்தை கூட்டி 6 ஆல் வகுத்து சராசரி ஆக வரும் ஒருமாதத் தை கணக்கிட்டு தொழில் வரி செலுத்த வேண்டும்.
6) இரண்டாவது பக்கத்தில் NHIS இல் தனியாக பணம் செலுத்தி உள்ளவர்கள் அதிக பட்சம் 25,000 வரை மட்டும் கழித்து கொள்ள முடியும்.
7)மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவ உயர் அலுவலரின் உரிய சான்றிதழ் பெற்று சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமே வருமானவரி விதிகளுக்கு உட்பட்டு (Medical Treatment ) கழிக்க முடியும்.
8)மாற்றுத்திறனாளிக ள் 90% வரை உள்ளவர்கள் 75.000 ரூபாயும் 91% மேல் உள்ளவர்கள் 1,25,000 ரூபாய் கழித்து கொள்ள முடியும். (உரிய சான்றிதழ் இணைக்கப் படவேண்டும் ).
9) இதர கழிவுகள் உள்ளது என்பதை கணக்கிட்டு கழித்து கொள்ள வேண்டும்.
10) 2022 மார்ச் முதல் 2023 பிப்ரவரி முடிய பெற்ற அனைத்து நிலுவை தொகையையும் வருமானவரி கணக்கில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment