ஜாமின் வேண்டுமா? அரசு பள்ளிக்கு உதவிட வேண்டும் - கடத்தல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 16, 2023

ஜாமின் வேண்டுமா? அரசு பள்ளிக்கு உதவிட வேண்டும் - கடத்தல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 




கடத்தல் வழக்கில் ஜாமின் பெற அரசு பள்ளிக்கு உதவிட நீதிமன்றம் உத்தரவு


புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரியவர்களுக்கு 'அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.


அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்பில் புகையிலை பொருட்களை கடத்தியதாக சிவகங்கை சரத்குமார், விக்னேஸ்வரன், வினோத்கண்ணன் ஆகியோரை நாச்சியாபுரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தங்களுக்கு ஜாமின் கோரி மூவரும் மனு அளித்தனர்.


இம்மனு நீதிபதி ஏ.டி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார், வினோத் கண்ணன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். விக்னேஸ்வரன் ஜாமினை தள்ளுபடி செய்தார். மேலும் சரத்குமார் ரூ. ஒரு லட்சமும், வினோத் கண்ணன் ரூ.1.50 லட்சமும் தேவகோட்டை தாலுகா வீரை ஊராட்சி காரிக்குடி அரசு நடுநிலைப்பள்ளிக்காக அதன் தலைமையாசிரியர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.


இப்பணத்தை பள்ளிக்கு தேவையான பர்னிச்சர்கள் வாங்க வேண்டும். இதற்கான விபரங்களை சம்பந்தப்பட்ட போலீசில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவித்தார்




Post Top Ad