தேசிய வாக்காளர் தினம்: பள்ளி மாணவர்களுக்கு விநாடி- வினா போட்டி - Asiriyar.Net

Tuesday, January 10, 2023

தேசிய வாக்காளர் தினம்: பள்ளி மாணவர்களுக்கு விநாடி- வினா போட்டி

 
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய தேர்தல்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான விநாடி-வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


9 முதல் 12-ம் வகுப்பு வரை: 13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டும், வருங்கால வாக்காளர்களின் தேர்தல் பங்களிப்பை மேம்படுத்தும் வகையிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, இந்தியத் தேர்தல்கள் மற்றும் பொது அறிவு குறித்து மாநில அளவிலான விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியிலும் 2 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.


ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சிறந்த 2 அணிகள், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முதல்நிலைப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும். மொத்தம் 76 அணிகள் முதல்நிலைப் போட்டியில் பங்கேற்கும்.


3 அணிகளுக்கு பரிசு: முதல்நிலை, அரையிறுதி மற்றும்இறுதிநிலைப் போட்டிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வரும் 10, 11-ம் தேதிகளில் காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் 3சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின்போது பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானது. இவ்வாறு சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.


Post Top Ad