இன்று முழுதும் சமூக ஊடகங்களில் "புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதற்கான அறிவிப்பு வரும் நிதிநிலை
அறிக்கையில் வெளியாகும் என முதல்வர் அறிவித்தாகவும்" ஒரு செய்தி தாறுமாறாக ஓடியது. அப்படி ஒரு செய்தி அரசுத்தரப்பில் வெளியானதாக தெரியவில்லை.
இப்படி ஓர் அறிவிப்புக்கு போதுமான நிரப்பந்தம் இன்னும் எழவில்லை. தாளச்சங்கங்கள் எழுப்பும் ஓசை இப்போதும் வலுவாகவே உள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலுக்கான ஆதாயம் கருதி இந்த குழப்பம் கிளம்பி இருக்கலாம். ஆனால் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால் இப்படியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பே இல்லை.
கவனம் சிதற வேண்டாம்.
வானம் வசப்படும் தூரம்தான்!
களம் கனலாகட்டும்!!.
-முன்னாள் மாநிலத்தலைவர்
கே.கங்காதரன்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
No comments:
Post a Comment