ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 9, 2023

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

 



💐இன்றைய மதுரை ஜாக்டோ-ஜியோ தீர்மானம்:*


ஜாக்டோ-ஜியோ சார்பாக 05.01.2023-ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சூழலில் இன்று (08.01.2023) மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில்,


12.02.2023 : மாவட்டத் தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு


05.03.2023 : மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம்


24.03.2023 : வட்டார & மாவட்டத் தலைநகரங்களில் 20000 Km. நீள மனிதச் சங்கிலிப் போராட்டம்


 உள்ளிட்ட மூன்றுகட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கூட்ட முடிவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜாக்டோ-ஜியோ மீது திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் போராடவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 

"20 மாதங்களாக திமுக அரசு செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்; ஆனால், அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட EL Surrender, Incentive உள்ளிட்ட உரிமைகளையும் திமுக முழுமையாக நிறுத்திவிட்டது; முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் செய்வதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை & முதுநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, சத்துணவு & ஊராட்சி பணியாளர்களுக்கான காலமுறை ஊதியம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளைச் செயல்படுத்தவிடாது அதிகாரிகள் தடுத்து வருவதோடே வருங்காலத்தில் அரசுப்பணியே கிடையாது என்ற நோக்கில் தமிழ்நாட்டு அரசை கார்ப்ரேட் அரசாக மாற்றி வருகின்றனர். 


இப்போராட்டங்களில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகளையும் ஜாக்டோ-ஜியோ அறிவிக்கும் என்று இன்றைய கூட்டத்திற்குத் தலைமையேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.பொன் செல்வராஜ், திரு.மு.அன்பரசு, திரு.ச.மயில் உள்ளிட்டோர் கூட்டாக அறிவித்தனர்.


*💐(1) 26.1.2023 மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ புனரமைப்புக்கூட்டம்.


*💐(2) 19.2.2023 மாவட்ட அளவில் உரிமை மீட்பு கருத்தரங்கு.


*💐(3) 5.3.2023 மாவட்ட அளவில் உண்ணாவிரதப்போராட்டம்.


*💐(4)24.3.2023 மாவட்ட அளவில் மனிதசங்கிலி 20 ஆயிரம் கி.மீ தூரம்.




Post Top Ad