CBSE - 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு! - Asiriyar.Net

Tuesday, October 4, 2022

CBSE - 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!

 



மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு:


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் , நடப்பாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக நடப்பது போல் 100% பாடத்திட்டத்தின் படி தான் தேர்வுகள் நடக்க உள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad