ஆசிரியர்கள் Transfer - கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! - Asiriyar.Net

Sunday, October 17, 2021

ஆசிரியர்கள் Transfer - கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!

 





திருச்சி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை இயங்கும் குளிர்சாதன பேருந்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,


நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலைமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும்தான் விவாதித்தோம். ஆனால், அறிவிப்பில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இதுகுறித்து தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும்.” ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன


இவ்வாறு அவர் கூறினார். 



Post Top Ad