e-Filing தளத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோா் வரிக் கணக்கு தாக்கல் - Asiriyar.Net

Sunday, October 17, 2021

e-Filing தளத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோா் வரிக் கணக்கு தாக்கல்

 




வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தில் 2 கோடிக்கும் அதிகமான தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன


வருமான வரித் துறையின் இணையதளம் 2021 அக்டோபா் 13 வரை 2 கோடிக்கும் அதிகமான வருமான வரி தாக்கல்களை பெற்றுள்ளது.


2021 ஜூன் 7-இல் தொடங்கப்பட்ட புதிய தளத்தின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிரமங்களை வரி செலுத்துவோா் குறிப்பிட்டனா். பல தொழில்நுட்ப சிக்கல்கள் தீா்க்கப்பட்டு தளத்தின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.


2021 அக்டோபா் 13 வரை 13.44 கோடிக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோா் உள்நுழைந்துள்ளனா். சுமாா் 54.70 லட்சம் வரி செலுத்துவோா் தங்கள் கடவுச்சொற்களைப் பெற ‘மறக்கப்பட்ட கடவுச்சொல்’ வசதியைப் பெற்றுள்ளனா்.


அனைத்து வருமான வரி அறிக்கைகளையும் இ-தாக்கல் செய்ய முடியும். 2021-22-ம் ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் தளத்தில் செய்யப்பட்டுள்ளன, இவற்றில் வருமான வரி தாக்கல்கள் 1 மற்றும் 4 86 சதவீதம் ஆகும். ஆதாா் அடிப்படையிலான ஓடிபி மூலம் 1.49 கோடிக்கு அதிகமான தாக்கல்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளன.


2021-22 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இன்னும் தாக்கல் செய்யாத அனைத்து வரி செலுத்துவோரும் விரைவில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.




Post Top Ad